ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தில், ஊரடங்கை தளர்த்த வலியுறுத்தி, 100க்கும் மேற்பட்டோர் நாடாளுமன்ற வளாகத்தின் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
முற்றுகையிட முயன்ற ஆர்ப்பாட்டக்காரர்களை, பாதுகாவலர்கள் தடுத்ததை தொடர்ந்து, இருதரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில், பாதுகாவலர் ஒருவர் தாக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதனை தொடர்ந்து, 10 ஆர்ப்பாட்டக்காரர்கள் கைது செய்த காவல்துறையினர், அவர்கள் மீது தனிநபர் இடைவெளி கடைபிடிக்கத் தவறியது, காவல்துறையினரை தாக்கியது உள்ளிட்ட குற்றங்களுக்காக வழக்கு பதிவு செய்தனர்.