மலேசியாவில் பொதுமக்களின் நடமாட்டத்துக்கு (Malaysia’s movement control order) விதிக்கப்பட்ட கட்டுப்பாடு ஜூன் மாதம் 9ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
மலேசியாவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மார்ச் 18ஆம் தேதி முதல் கட்டுப்பாடு அமலில் உள்ளது.
அந்த கட்டுப்பாடு 12ஆம் தேதியுடன் நிறைவடைய இருந்தது. அதை தற்போது மேலும் 4 வாரங்களுக்கு, ஜூன் 9ஆம் தேதி வரை நீட்டித்து பிரதமர் முகைதீன் யாசீன் (Muhyiddin Yassin ) உத்தரவிட்டுள்ளார்.
நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்திய அவர், பொதுமக்களின் அபிப்ராயம், சுகாதார அமைச்சகம் மற்றும் தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் பரிந்துரையை கவனத்தில் கொண்டு கட்டுப்பாட்டை நீட்டிப்பு செய்வதாக அறிவித்தார். மலேசியாவில் ஏற்கெனவே 3 முறை கட்டுப்பாடு நீட்டிக்கப்பட்டது. தற்போது அந்த கட்டுப்பாட்டை 4ஆவது முறையாக அரசு நீட்டித்துள்ளது.