ஆஸ்திரேலியாவில் அன்னையர் தினத்தை கொண்டாடும் விதமாக மருத்துவமனையின் சுவரில், புதிதாக தாயானவர்கள், கர்ப்பிணிகளின் புகைப்படங்கள் திரையிடப்பட்டன.
அந்நாட்டில் கொரோனா தொற்றால் 100க்கும் குறைவானவர்கள் உயிரிழந்துள்ள நிலையில், நோய் அச்சுறுத்தலுக்கு இடையே அன்னையர் தினத்தையொட்டி சிறப்பு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. அந்த வகையில், மெல்போர்னில் உள்ள ராயல் மகளிர் மருத்துவமனை சுவர், உலக அன்னையர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் ஒளியூட்டப்பட்டது.