ஹண்ட்வாரா தீவிரவாதத் தாக்குதலுக்குப் பதிலடி நடக்கலாம் என்கிற அச்சத்தால் பாகிஸ்தான் விமானப் படை எல்லையில் போர் விமானங்களைப் பணியில் ஈடுபடுத்தியுள்ளது.
காஷ்மீரின் ஹண்ட்வாராவில் தீவிரவாதிகளுடனான மோதலில் பாதுகாப்புப் படையினர் 5 பேர் வீரமரணம் அடைந்தனர்.
இதற்குப் பதிலடி கொடுப்பதற்காக இந்தியா எந்த நேரமும் தாக்குதல் நடத்தக் கூடும் என்கிற அச்சத்தில் பாகிஸ்தான் உள்ளது.
இதனால் எல்லைப் பகுதிகளில் எப் 16, ஜேஎப் 17 ஆகிய போர் விமானங்களைக் கண்காணிப்பில் ஈடுபடுத்தியுள்ளது.
புல்வாமாவில் பாதுகாப்புப் படைவீரர்களுக்கு எதிரான தாக்குதலை அடுத்துப் பாகிஸ்தானின் பாலக்கோட்டில் உள்ள ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத இயக்கத்தின் பயிற்சி முகாம் மீது இந்திய விமானப் படை தாக்குதல் நடத்தியது குறிப்பிடத் தக்கது.