மலேரியா எதிர்ப்பு மருந்தான ஹைட்ராக்சிகுளோரோகுயின், கொரோனா தொற்றுநோய் சிகிச்சையில் பலனளிக்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
நியூயார்க்கில் இரண்டு மருத்துவமனைகளில், அவசர சிகிச்சைப் பிரிவு நோயாளிகள் ஆயிரத்து 376 பேருக்கு ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்து கொடுக்கப்பட்டு, நோக்காய்வு செய்யப்பட்டுள்ளது.
சுவாச உதவி தேவைப்படும் நிலையை மாற்றவோ அல்லது மரணமடையும் அபாயத்தை தடுக்கவோ இந்த மருந்து உதவவில்லை என சிகிச்சை அளித்த மருத்துவர்கள் தெரிவித்ததாக, மருத்துவ ஆய்விதழில் வெளியான கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹைட்ராக்சிகுளோரோகுயின் கொடுக்கப்படாத நோயாளிகளும், அந்த மருந்து கொடுக்கப்பட்ட நோயாளிகளுக்கும் இடையே எவ்வித வேறுபாடும் கண்டறியப்படவில்லை என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இது நோக்காய்வு முடிவு என்பதால், இறுதியான முடிவாக எடுத்துக் கொள்ளப்படாது என்றும், ஹைட்ராக்சிகுளோரோகுயின் எந்த அளவிற்கு பலனளிக்கும் என்பதை உறுதி செய்ய விரிவான ஆய்வுகள் தேவை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.