அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் பற்றி எரியும் காட்டுத் தீயினால் 2ஆயிரம் ஏக்கர் வனப்பகுதி முழுவதும் எரிந்து நாசமானது.
இங்கு கடந்த 4ந்தேதியே தீப்பற்ற தொடங்கினாலும் நேற்று தான் பலத்த காற்று மற்றும் குறைந்த ஈரப்பதம் காரணமாக தீயானது கொளுந்து விட்டு எரியத் தொடங்கியதாக புளோரிடா வனத்துறையினர் தெரிவித்தனர்.
இந்த தீ விபத்தில் 33 வீடுகள் எரிந்து சாம்பலானதாகவும், உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை என்றும் தீயணைப்பு துறையினர் தெரிவித்தனர். இதற்கிடையில் வனப்பகுதியில் தீப்பிடித்து எரியும் காட்சிகளை அப்பகுதியை சேர்ந்த ஒருவர் வீடியோவாக எடுத்து வெளியிட்டுள்ளார்.