அமெரிக்காவின் பாஸ்டன் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு ராணுவத்தினர் இலவசமாக பால் விநியோகம் செய்தனர்.
கொரோனா காரணமாக அவர்கள் முக கவசம் அணிந்தும், தனி மனித விலகலை கடைபிடித்தும் பாலை வழங்கினர். குறைவான தேவை இருந்தும் அதிகப்படியான பால் உற்பத்தி செய்த காரணத்தால் அதனை கீழே கொட்டி வீணாக்க விரும்பாமல் உணவின்றி அவதிப்படும் மக்களுக்கு இலவசமாக வழங்க முடிவு எடுக்கப்பட்டது. அமெரிக்காவில் கொரோனாவுக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 74ஆயிரத்தை தாண்டியுள்ளது. மேலும் 12லட்சத்திற்கும் அதிகமானோர் இந்த வைரஸ் தாக்குதலுக்கு ஆளாகி உள்ளனர்.