ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் ரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட விபத்து தொடர்பாக விரிவான விசாரணை தேவை என, ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் ஆண்டோனியா குட்டாரெஸ் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் செய்தியாளர்களைச் சந்தித்த அவரது செய்தித் தொடர்பாளர், விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஐநா சபை சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்வதாகவும் தெரிவித்தார். மேலும், இந்த விபத்து தொடர்பாக உள்ளூர் அதிகாரிகள் விரிவான விசாரணை மேற்கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.