உலகின் தூங்காநகரம் என்றழைக்கப்படும் நியூயார்க் நகரில், கடந்த 115 ஆண்டுகளாக, 24 மணிநேரமும் செயல்பட்டு வரும் சுரங்கப்பாதை ரயில்கள், முதல் முறையாக, தங்கள் பின்னிரவு சேவைகளை நிறுத்தியுள்ளன.
தினமும், 90 லட்சம் பேர், பயணிக்கும் இந்த சுரங்க ரயில்களில், கொரோனா தொற்று பரவுவதை தடுக்கும் நடவடிக்கையாக, கிருமி நாசினி தெளிக்கப் படுவதால், 4 மணிநேரங்களுக்கு, ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டது.
நியூயார்கில் 19,000 க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பலியாகியுள்ள நிலையில், பெருநகர போக்குவரத்து ஆணைய ஊழியர்கள், ரயில் பெட்டிகளை தூய்மைப்படுத்தும் பணியில், தீவிரமாக ஈடுபட்டனர்.