பிரிட்டனில் வெள்ளை நிறத்தவர்களை விட இந்தியர்கள், பாகிஸ்தானியர், வங்கதேசத்தவர் மற்றும் அங்கு வசிக்கும் கறுப்பின மக்களுக்கு கொரோனா ஆபத்து 4 மடங்கு அதிகம் என அங்குள்ள அரசு தேசிய புள்ளியியல் துறை தெரிவித்துள்ளது.
கறுப்பின மக்களைப் பொறுத்தவரை வெள்ளைநிறத்தவரை விட ஆண்களில் 4 புள்ளி 2 மடங்கும், பெண்களில் 4 புள்ளி 3 மடங்கும் கொரோனா ஆபத்து அதிகம் என அது எச்சரித்துள்ளது.
இதே போன்று இந்தியர்கள் மற்றும் கலப்பின மக்களுக்கு தொற்று எளிதில் பரவுவதாகவும், அவர்களிடையே இறப்பு விகிதம் அதிகமாக இருப்பதாகவும் தேசிய புள்ளியியல் நிறுவனம் கூறியுள்ளது.