ஜப்பானில் இம்மாதம் 31ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து அந்நாட்டு பிரதமர் ஷின்சோ அபே உத்தரவிட்டுள்ளார்.
கொரோனா பரவலை தடுக்க முன்னெச்சரிக்கையாக ஜப்பானில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்தது. இந்த ஊரடங்கு நேற்றிரவுடன் முடிவுக்கு வந்தது. இருப்பினும் ஊரடங்கை இம்மாதம் 31ம் தேதி வரை நீட்டித்து பிரதமர் ஷின்சோ அபே உத்தரவிட்டுள்ளார். டோக்கியோவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கொரோனா தீவிரம் முடிவுக்கு வந்துவிட்டதாக நிபுணர்கள் தெரிவிக்கும்பட்சத்தில், 31ம் தேதியோடு ஊரடங்கை விலக்கி கொள்ளதயாராக உள்ளதாகவும் குறிப்பிட்டார்.