பியர்ல் ஹார்பர் தாக்குதல், இரட்டை கோபுர தகர்ப்பு சம்பவங்களை விட அமெரிக்காவில் கொரோனா மோசமான அழிவை ஏற்படுத்தி இருப்பதாக அந்நாட்டின் அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
1941ம் ஆண்டில் பியர்ல் ஹார்பர் துறைமுகம் மீது ஜப்பான் குண்டுவீசிய பிறகே, 2ம் உலக போரில் அமெரிக்கா குதித்தது. 2001ம் ஆண்டில் நியூயார்க்கிலுள்ள இரட்டை கோபுரங்களை அல்கொய்தா பயங்கரவாதிகள் விமானங்களை மோதி தகர்த்தபிறகே, ஆப்கானிஸ்தானுக்குள் நுழைந்து தலிபான்களுக்கு எதிராக அமெரிக்கா போர் தொடுத்தது.
இந்த 2 சம்பவங்களை சுட்டிக்காட்டி, அதை காட்டிலும் கொரோனா நோய் அமெரிக்காவில் மோசமான அழிவை ஏற்படுத்தியுள்ளதாக டிரம்ப் தெரிவித்துள்ளார். இதுபோன்ற நிலையை அமெரிக்கா முன்னெப்பொதும் சந்தித்ததில்லை எனவும் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.