அமெரிக்காவில் கொரோனாவைத் தொடர்ந்து சிறு குழந்தைகளை மர்ம நோய் தாக்கி வருவது கவலையை ஏற்படுத்தி உள்ளது.
2 முதல் 15 வயதுக்குட்பட்ட 15 குழந்தைகள் நியூயார்க் நகரில் அழற்சி நோயால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த நோய் கவாசாகி என்ற நோய்க்குறியுடன் ஒத்திருப்பதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனால் குழந்தைகளுக்கு காய்ச்சல், வாந்தி, சொறி, வீங்கிய நிணநீர் உள்ளிட்ட உபாதைகள் ஏற்பட்டிருப்பதாகவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர். மேலும் மருத்துவமனையில் உள்ள குழந்தைகளில் 4 பேருக்கு கொரோனா தொற்று இருப்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கு புதிய தொற்று ஏற்பட்டுள்ளதால் நியூயார்க் நகரில் சுகாதார எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.