உலக நாடுகளில் பெருமளவில் பரவி அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசால் சிங்கப்பூர், கத்தார் ஆகிய நாடுகளில் மிகக் குறைந்த விகிதத்திலேயே உயிரிப்பு ஏற்பட்டுள்ளது.
சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின், பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய நாடுகளில் லட்சக்கணக்கானோரைத் தாக்கியதுடன், உலகம் முழுவதும் இரண்டரை லட்சத்துக்கு மேற்பட்டோரைப் பலிவாங்கியுள்ளது.
இந்நிலையில் பரப்பளவில் சிறியவை ஆயினும் செல்வந்த நாடான சிங்கப்பூரில் 19 ஆயிரத்து 410 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், அவர்களில் 18 பேர் மட்டுமே உயிரிழந்தனர். நோய்த் தொற்று ஏற்பட்டவர்களுடன் ஒப்பிடும்போது உயிரிழந்தோர் விகிதம் பூஜ்யம் புள்ளி பூஜ்யம் ஒன்பது விழுக்காடாகும். இதேபோல் கத்தாரில் 17 ஆயிரத்து 142 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், 12 பேர் உயிரிழந்தனர். அங்கு உயிரிழப்பு விகிதம் பூஜ்யம் புள்ளி பூஜ்யம் ஏழு விழுக்காடாகும்.