அமெரிக்காவின் பைசர் நிறுவனம் தயாரித்துள்ள கொரோனா தடுப்பு மருந்து சோதனை முறையில் தன்னார்வலருக்கு ஊசி மூலம் செலுத்தப்பட்டது.
கொரோனா வைரசுக்குத் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் அமெரிக்காவைச் சேர்ந்த பல்வேறு நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில் அமெரிக்காவின் பைசர், ஜெர்மனியின் பயான்டெக் ஆகியவை இணைந்து ஆர்என்ஏ தொழில்நுட்பத்துடன் கூடிய ஒரு தடுப்பு மருந்தைக் கண்டுபிடித்துள்ளன.
இதை நியூயார்க் பல்கலைக்கழகம், மேரிலாந்து பல்கலைக்கழகம் ஆகியவற்றுடன் இணைந்து ஆட்களுக்குச் செலுத்திச் சோதித்துப் பார்க்க உள்ளனர். திங்களன்று சோதனை முறையில் இதைத் தன்னார்வலர் ஒருவருக்குச் செலுத்தி உள்ளனர். 18 வயது முதல் 55 வயது வரை நல்ல உடல்நலமிக்கவர்களுக்கு முதலில் செலுத்திப் பாதுகாப்பை உறுதி செய்துகொண்ட பின்னர், அதிக வயதானவர்களுக்கும் மருந்தைச் செலுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.