எச்ஐவி, டெங்கு போன்று கொரோனாவுக்கும் தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட முடியாத நிலைமை ஏற்படலாம் என கூறி, உலக சுகாதார நிறுவனத்தின் கொரோனா பிரதிநிதி டாக்டர் டேவிட் நப்ரோ (David Nabrro) அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறார்.
தடுப்பூசி கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு பலம் வாய்ந்த வைரசுகள் இருப்பதாக கூறி உள்ள அவர், அதையும் மீறி தடுப்பூசிகள் உருவாக்கப்பட்டாலும் அவை பாதுகாப்பானதாகவும், பலனளிக்ககூடியதாகவும் இருக்குமா என சந்தேகம் எழுப்பி இருக்கிறார்.
தற்போது 100 க்கும் அதிகமான கொரோனா தடுப்பூசி ஆய்வுகள் நடந்து இரண்டு தடுப்பூசிகள் மனிதர்களிடம் சோதித்துப் பார்க்கப்பட்டு வருகின்றன. 18 மாதங்களில் தடுப்பூசியை கண்டுபிடித்து விடலாம் என அமெரிக்காவின் முன்னணி கொரோனா நிபுணர் அந்தோணி பவுசி கூறும் நிலையில் அது சாத்தியமில்லை என ஹுஸ்டன் விஞ்ஞானி பீட்டர் ஹோட்டஸ் கூறி இருப்பது குறிப்பிடத்தக்கது.