அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள இஸ்லாமொராடா கடற்கரையில் பிறந்து 2மாதமே ஆன கடல்பசு ஒன்று உயிருடன் மீட்கப்பட்டது.
அந்த கடல்பசுவை மீட்கும் வீடியோ காட்சிகள் ஆன்லைனில் வெளியிடப்பட்டன. அந்த கடல்பசு எடை குறைவாக இருப்பதும் பாக்டீரியா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதும் தெரிய வந்தது. இதனை அடுத்து அதற்கு தேவையான சிகிச்சைகள் அளிப்பதற்காக மியாமி கடல் ஆராய்ச்சி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.