தென்கொரியாவில் சமூக விலகல் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதை அடுத்து மனமகிழ் பூங்காக்களுக்கும், திரையரங்கங்களுக்கும் சென்று பொதுமக்கள் மகிழ்ச்சியாகப் பொழுதுபோக்கினர்.
தென்கொரியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை பத்தாயிரத்து 801ஆக உள்ளது. ஆனால் நோய் பாதிப்பு கட்டுப்படுத்தப்பட்டு சமூக விலகல் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதை அடுத்து சியோலில் உள்ள மனமகிழ் பூங்காவுக்கு ஞாயிற்றுக்கிழமை ஏராளமானோர் வந்து மகிழ்ச்சியாகப் பொழுது போக்கினர்.
முன்னெச்சரிக்கையாக அனைவருக்கும் வெப்பநிலை கண்டறியும் சோதனை செய்வதுடன், 2 மீட்டர் இடைவெளியைப் பராமரிக்கச் செய்கின்றனர். இதேபோல் நீண்ட இடைவெளிக்குப் பின் திரையரங்கங்களுக்கும் மக்கள் சென்று திரைப்படங்களைக் கண்டுகளித்தனர்.