கொரோனா வைரஸ் காரணமாக ஆஸ்கர் விருது வழங்கும் விதிமுறைகளில் தற்காலிக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக ஆஸ்கர் கமிட்டி சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், நேரடியாக இணையதளங்களில் வெளியாகும் படங்களும் ஆஸ்காருக்கு அனுப்பலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் அந்த படங்கள் திரையரங்குகளில் வெளியிட திட்டமிட்ட படங்களாக இருக்க வேண்டும் என்றும் நேரடியாக இணையதளங்களில் வெளியிடுவதற்காக தயாரித்த படங்களாக இருக்க கூடாது என்றும் தெளிவுபடுத்தி உள்ளது.
இந்த விதிமுறை தளர்வு தற்காலிகமானது தான் என்றும், கொரோனா பிரச்சனை முடிவுக்கு வந்ததும் பழைய விதிமுறையே பின்பற்றப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.குறைந்தபட்சம் ஒரு வாரமாவது திரையரங்குகளில் திரையிடப்பட்ட படங்கள் தான் ஆஸ்காருக்கு அனுப்பப்பட வேண்டும் என்பது விதிமுறையாகும்