கொரோனா தொற்றில் இருந்து மீண்டுள்ள சீனாவில் ஒரே நாளில் உள்நாட்டு சுற்றுலா பயணிகள் மூலம் இந்திய மதிப்பில் 13 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.
அந்நாட்டின் ஊகான் நகரில் உருவானதாக கூறப்படும் கொரோனா வைரஸ் உலகை ஆட்டிப் படைத்து வருகிறது.
இந்த நிலையில் நோய் பாதிப்பில் இருந்து மீண்ட குறுகிய காலத்தில் சீனாவில் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலாத் தலங்கள் மக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டுள்ளன.
திறந்த வெளி சுற்றுலாத் தலங்களில் நோய் தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி குறைந்த அளவு சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் ஒரே நாளில் பல்வேறு இடங்களில் 3 கோடி பேர் சுற்றுலாப் பயணம் மேற்கொண்டதாகவும், ரயில் மூலம் 47 லட்சம் பேர் பயணம் செய்துள்ளதாகவும் அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.