ஆஸ்திரேலியாவில் காட்டுத்தீயால் காணாமல் போன செம்மறியாடு ஏழாண்டுகளுக்குப் பின் மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
டாஸ்மேனியாவின் டுனாலே என்னுமிடத்தில் 7 ஆண்டுகளுக்கு காணாமல்போன செம்மறியாடு இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் கண்டுபிடிக்கப்பட்டுப் பண்ணைக்குக் கொண்டுவரப்பட்டது.
7 ஆண்டுகளாகத் தனிமையில் சுற்றியதால் அதன் உடலில் புதர்போல் முடி வளர்ந்திருந்தது. முடி முழுவதும் பறிக்கப்பட்டதால் புத்துணர்வுடன் செம்மறியாடு அங்குமிங்கும் துள்ளி விளையாடியது.
ஆட்டில் பறிக்கப்பட்ட 14 கிலோ முடியில் இருந்து கம்பளிப் பொருட்கள் செய்து ஏலம்விட்டு அதில் கிடைக்கும் தொகையை அகதிகள் நலனுக்காக வழங்கப் பண்ணை உரிமையாளர் அலிஸ் பென்னட் திட்டமிட்டுள்ளார். குறைந்தது 5 லட்சத்து 82ஆயிரம் ரூபாய் திரட்டத் திட்டமிடப்பட்டுள்ளது.