கொரோனா தொற்றை தவறாக கையாண்டதற்காக சீனா மீது வரிகளை விதிப்பதும் ஒரு வழிமுறையாக இருக்கும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
முன்னதாக கொரோனா வைரசை பரப்பியதற்காக சீனாவுக்கு தண்டனை வழங்கும் வகையில் அந்நாட்டின் மீது கூடுதல் வரிகளை விதிக்க வேண்டும் என ட்ரம்ப் பேசியிருந்தார். அதற்கடுத்த நாளே செய்தியாளர் சந்திப்பில் அது குறித்த கேள்விக்கு பதிலளித்த ட்ரம்ப், சீனா மீதான கூடுதல் வரிவிதிப்பு நிச்சயமாக ஒரு வழிமுறையாக இருக்கும் என தெரிவித்தார்.
மேலும் சீனாவால் உலகம் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருவதாகக் கூறிய ட்ரம்ப், உலகம் முழுக்க 182 நாடுகள் மோசமான நிலையில் இருப்பதாகவும் தெரிவித்தார். அதே போல் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோவும் கொரோனா விஷயத்தில் சீனா வெளிப்படைத்தன்மையுடன் நடந்து கொள்ளவில்லை என தெரிவித்துள்ளார்.