வடகொரியத் தலைவர் கிம் ஜாங் உன் உள்ளிட்ட தலைவர்களுடன் ஞாயிற்றுக்கிழமை பேச உள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.
வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், ஞாயிற்றுக்கிழமை தான் கேம்ப் டேவிட் ஓய்வு இல்லத்துக்குச் செல்ல இருப்பதாகவும், அப்போது கிம் ஜாங் உன் உட்பட உலகின் பல்வேறு நாட்டுத் தலைவர்களுடன் தொலைபேசியில் பேச உள்ளதாகவும் தெரிவித்தார்.
கிம் ஜாங் உன் நலமுடன் இருப்பதாகத் தென்கொரியா ஏற்கெனவே தெரிவித்த நிலையில், தொழிலாளர் நாளில் புதிய உரத்தொழிற்சாலையை அவர் திறந்து வைத்த படம் வெளியாகியுள்ளது குறிப்பிடத் தக்கது.