கொரோனா பரவல் குறித்து ஜனவரி மாதத்திலேயே அமெரிக்காவுக்கு தெரியபடுத்தியதாகவும், ஆனால் அதை அமெரிக்காதான் பொருட்படுத்தவில்லை என்றும் சீனா தெரிவித்துள்ளது.
ட்விட்டரில் பிரான்ஸ் நாட்டுக்கான சீனத் தூதரகம், ஒன்ஸ் அப்பான் ஏ வைரஸ் (once upon a virus) என்ற பெயரில் அனிமேசன் வீடியோ வெளியிட்டுள்ளது.
அந்த வீடியோவில் கொரோனா பரவல் கால அட்டவணை, சீனா மற்றும் அமெரிக்கா பரஸ்பரம் குற்றம்சாட்டுவதை அடிப்படையிலான கார்டூன் காட்சிகள் உள்ளன.
அதில் ஜனவரி மாதத்திலேயே கொரோனோ குறித்து அமெரிக்காவிடம் சீனா தெரியபடுத்தியதாகவும், அதை அமெரிக்காதான் கவனத்தில் கொள்ளவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.