கொரோனா வைரஸ் சீன ஆய்வகத்தில் உருவானது என்று தாம் நம்பவில்லை என்று ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் (Scott Morrison) கூறி இருக்கிறார்.
உலக உயிர் கொல்லியாக மாறிவிட்ட கொரோனா வைரஸ் சீனாவின் ஊகான் நகர ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டது என அமெரிக்க அதிபர் டிரம்ப் திரும்ப திரும்ப கூறி வருகிறார்.
இதற்கு ஆதரவாக பேசிய ஆஸ்திரேலியா, அது குறித்து சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தியது.
இந்த நிலையில் கான்பெராவில் உள்ள நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் ஸ்காட் மோரிசனிடம் டிரம்பின் பேச்சு பற்றி கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த அவர் கொரோனா வைரஸ் ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டது என்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை என கூறினார். தொற்று பரவிய நேரத்தில் ஏற்பட்ட குழப்பம் காரணமாகவே ஆஸ்திரேலியா முதலில் விசாரணை கோரியது என்றும் அவர் தெரிவித்தார்.