வரும் 4 ஆம் தேதி முதல் மலேசியாவில் வர்த்தக நடவடிக்கைகளை துவக்க முடிவு செய்துள்ளதாக பிரதமர் முஹியுத்தீன் யாசின் தெரிவித்துள்ளார்.
சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு பெரும்பாலான வணிக நிறுவனங்களை திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். அதே சமயம் மக்கள் அதிகம் கூடுகிற திரையரங்குகள், மால்கள் போன்றவை திறக்கப்படமாட்டாது என நாட்டு மக்களுக்கு ஆற்றிய தொலைக்காட்சி உரையில் அவர் கூறினார். கொரோனா மற்றும் அதை ஒட்டிய ஊரடங்கால் மலேசியாவுக்கு சுமார் 1,11,416 கோடி ரூபாய் (14.66 பில்லியன் டாலர்) பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.