கொரோனா வைரஸ் மனிதர்களால் உருவாக்கப்பட்டதோ, மரபணு மாற்றம் செய்யப்பட்டதோ அல்ல என அமெரிக்க உளவு நிறுவனம் அறிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் உலகம் முழுவதிலும் பல லட்சம் பேருக்குப் பரவியிருப்பதற்கு, சீனா மீது அமெரிக்கா கடுமையான குற்றச்சாட்டுகளை தெரிவித்துள்ளது. கொரோனா பரவத் துவங்கியதிலிருந்தே, சீனாவின் மீது விமர்சனங்களை வைத்து வருகிறார், அமெரிக்க அதிபர் டிரம்ப்.
இந்நிலையில், கொரோனா வைரஸ் மனிதர்களால் உருவாக்கப்பட்டதோ, மரபணு ரீதியாக மாற்றம் செய்யப்பட்டதோ அல்ல என அமெரிக்க உளவுத்துறை கூறியுள்ளது. அதே சமயம், கொரோனா தொற்றுக்கு உள்ளான விலங்குகளிலிருந்து மனிதனுக்கு வைரஸ் பரவியதா, அல்லது, சீனாவிலுள்ள வூஹான் ஆய்வுக் கூடத்தில் ஏற்பட்ட விபத்தால் பரவியதா என்பதை தொடர்ந்து ஆராய்ந்து வருவதாகவும் அமெரிக்க உளவுத்துறை தெரிவித்துள்ளது.