பிரேசிலில் கொரோனா நோய் பாதிப்பு அதிகரித்திருப்பது குறித்த கேள்விக்கு, அதனால் என்ன ? என்று அலட்சியமாக பதிலளித்ததால் அந்நாட்டு அதிபர் போல்சனோரோ சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
பிரேசிலில் கொரோனா பலி 5 ஆயிரத்தை தாண்டியுள்ள நிலையில், ஆயிரகணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து பிரேசில் அதிபர் ஜேயர் போல்சனோரோவிடம் செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர். அதற்கு அவர், அதனால் என்ன என்றும், அதற்கு நான் என்ன செய்ய வேண்டுமென விரும்புகிறீர்கள் என்றும் பதிலளித்தார்.