கொரோனா வைரஸ் பரவலால் 160 கோடிப்பேர் வேலையிழக்கும் அபாயம் உள்ளதாக உலகத் தொழிலாளர் அமைப்பு தெரிவித்துள்ளது.
உலகத் தொழிலாளர் அமைப்பின் வெளியீட்டில், உலகில் 330 கோடித் தொழிலாளர்கள் உள்ளதாகவும், இவர்களில் 200 கோடிப் பேர் முறைசாரா அமைப்புகளில் பணி செய்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளது.
கொரோனா பரவலால் முறைசாராத் தொழிலாளர்கள் 160 கோடிப் பேர் வேலையிழந்து வருமானம் இல்லாமல் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது. சில்லறை விற்பனை, உற்பத்திப் பிரிவுளைச் சேர்ந்த 43 கோடி நிறுவனங்கள் கடுமையான இடையூறுகளைச் சந்திக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளது. இந்த நிறுவனங்களையும், தொழிலாளர்களையும் காப்பாற்றுவதற்கு ஊக்குவிப்புத் திட்டங்கள், கடன் தள்ளுபடி ஆகியவற்றை வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.