அமெரிக்க அதிபர் தேர்தலில் தாம் தோல்வியடைய வேண்டுமென்று சீனா விரும்புவதாக அதிபர் டிரம்ப் குற்றம்சாட்டியுள்ளார்.
ஓவல் அலுவலகத்தில் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்கு டிரம்ப் அளித்த பேட்டியில், வர்த்தகம் உள்ளிட்ட விவகாரங்களில் சீனாவுக்கு அதிக நெருக்கடி கொடுப்பதால், அதிபர் தேர்தலில் தாம் தோல்வியடைய வேண்டுமென சீனா விரும்புவதாகவும், தமது தோல்விக்கு சீனா எதையும் செய்யும் என்றும் குறிப்பிட்டார்.
இதேபோல் அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் மூத்த தலைவர் ஜோ பிடன் வெற்றி பெற சீனா விரும்புவதாகவும் டிரம்ப் குறிப்பிட்டார்.