வியட்நாம் போரில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை காட்டிலும் கொரோனா பாதிப்பால் உயிரிழந்த அமெரிக்கர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
அமெரிக்காவில் கொரோனா வைரசால் 10 லட்சத்து 35 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உலகம் முழுவதும் பாதிப்புக்குள்ளானவர்களின் எண்ணிக்கையில் இது மூன்றில் ஒரு பங்காகும்.
இந்நிலையில் அங்கு கொரோனாவால் பலியானோரின் எண்ணிக்கை 59 ஆயிரத்தை கடந்துள்ளது.
இந்த எண்ணிக்கை தென்கிழக்காசிய போரான வியட்நாம் போரில் சந்தித்த உயிரிழப்புகளை காட்டிலும் அதிகமானதாகும். வியட்நாம் போரில் 58,220 அமெரிக்கர்கள் பலியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.