கொரோனாவை கட்டுப்படுத்தாத வரை ஒலிம்பிக் போட்டியை நடத்துவது சாத்தியமில்லை என்று ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே தெரிவித்துள்ளார்.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இந்த ஆண்டு நடத்த திட்டமிடப்பட்டிருந்த ஒலிம்பிக் போட்டி, கொரோனா நோய் பரவல் காரணமாக அடுத்த ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஜப்பான் நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர் அபே, விளையாட்டு வீரர்கள், பார்வையாளர்களின் பாதுகாப்பும், நலனும் முக்கியமென்றும், ஆதலால் கொரோனாவை கட்டுப்படுத்தாதவரை ஒலிம்பிக் போட்டியை நடத்துவது சாத்தியமில்லை என்றும் தெரிவித்தார்.