சிரியாவில் பெட்ரோலிய பொருட்கள் ஏற்றி வந்த லாரியில் வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு வெடித்ததில் 20க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர்.
வடக்கு சிரியாவில் உள்ள நகரம் ஒன்றில், இங்கிலாந்து தலைமையிலான கூட்டுப் படைகள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டள்ளன. அங்கு அருகில் உள்ள சந்தையில் நேற்று மக்கள் கூட்டம் அதிகமாகக் காணப்பட்டது. இந்த சமயத்தில் அங்கு வந்த எரிபொருள் நிரப்பிய லாரியில் தீவிரவாதிகள் வைத்திருந்த வெடிகுண்டுகள் திடீரென வெடித்துச் சிதறின. இந்தத் தாக்குதலில் துருக்கியைச் சேர்ந்த 6 பேர் உள்பட 22 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 27 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.