கொரோனா பாதிப்பால் விமானத்துறையில் ஏற்பட்டுள்ள சரிவால் பிரிட்டிஸ் ஏர்வேசில் 12 ஆயிரம் பணியிடங்களை குறைக்க திட்டமிட்டுள்ளதாக, அதன் உரிமை நிறுவனமான இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் தெரிவித்துள்ளது.
நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்த பல்வேறு நாடுகளில் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவால், விமான போக்குவரத்து முற்றிலும் முடங்கி அத்துறை பெரும் சரிவை சந்தித்துள்ளது. இதைதொடர்ந்து மறுசீரமைப்பிற்காக திட்டமிட்டுள்ள பிரிட்டிஸ் ஏர்வேஸ் நிர்வாகம், ஆட்குறைப்பு நடவடிக்கை மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் காரணமாக அந்நிறுவனம் இயல்பு நிலைக்கு திரும்ப பல ஆண்டுகள் ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்நிறுவனத்தில் விமான ஓட்டிகள் உட்பட சுமார் 45 ஆயிரம் பேர் பணியாற்றுவது குறிப்பிடத்தக்கது.