அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்து வரும் நிலையில், அதிகாலை முதல் நள்ளிரவு வரை இடைவிடாது தான் பணியாற்றுவதாக அதிபர் ட்ரம்ப் உருக்கத்துடன் தெரிவித்துள்ளார்.
பிரபல நாளிதழான நியூயார்க் டைம்ஸ் வெளியிட்டுள்ள செய்தியில், வெள்ளை மாளிகையில் மிகப்பெரிய படுக்கையறையிலும், விஷேசமாக தயாரிக்கப்படும் உணவுகளை சாப்பிட்டுக்கொண்டும், நாள் முழுவதும் தொலைக்காட்சியை பார்த்து கொண்டும் அதிபர் ட்ரம்ப் தனது பொழுதை கழிப்பதாக குற்றச்சாட்டப்பட்டது. இதற்கு பதிலளிக்கும் விதமாக ட்ரம்ப் பதிவிட்டுள்ள டுவிட்டில், இடைவிடாது தான் அதிபர் பணியை மேற்கொண்டு வருவதாகவும் வெள்ளை மாளிகையை விட்டு பல மாதங்கள் வெளியே செல்லவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.