இருட்டில் ஒளிரும் தன்மை உள்ள தாவரங்களைப் விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.
அவதார் திரைப்படங்களில் மின்மினிப் பூச்சிகள் போன்ற தாவரங்களை பார்க்க முடியும். எனினும் இவை நீண்ட காலத்துக்கு திரைப்படங்களில் மட்டுமே காணப்படும் அறிவியல் கனவாக இருக்கப்போவதில்லை என்று கூறப்படுகிறது. விஞ்ஞானிகள் குறிப்பிட்ட ஒளிரும் வகை காளான்களின் மரபணுக்களை பிற தாவரங்களில் செலுத்தி பச்சை நிறத்தில் ஒளிரும் தாவரங்களை உருவாக்கியுள்ளனர்.
தற்போது புகையிலைச் செடிகள் உள்ளிட்டவற்றை மட்டுமே ஒளிரும் தாவரங்களாக உருவாக்கியுள்ள நிலையில் எதிர்காலத்தில் ரோஜாப் பூக்கள் உள்ளிட்ட பல்வேறு வகை மலர்ச் செடிகளை இருளில் ஒளிரும் தாவரங்களாக உருவாக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறுகின்றனர்.