வெளிநாடுகளுக்கு அனுப்பவிருந்த தரம் இல்லாத சுமார் 9 கோடி முக கவசத்தை பறிமுதல் செய்துள்ளதாக சீன அரசு தெரிவித்துள்ளது.
உலக நாடுகள் பலவும் கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் முக கவசங்கள் உள்ளிட்ட தனிநபர் பாதுகாப்பு கவசங்களுக்கு பெரிய தேவை ஏற்பட்டுள்ளது.
இவற்றின் பெரும் பங்கு சீனாவில் இருந்து இறக்குமதியாகிறது. அதே சமயம் சீனாவில் இருந்து வரும் பாதுகாப்பு கவசங்கள் தரமற்றவை என்ற புகாரும் அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில், சீனாவில் சுமார் ஒன்றரை லட்சம் வர்த்தக நிறுவனங்களிடம் நடத்தப்பட்ட அதிரடி சோதனையில் சுமார் 9 கோடி தரமற்ற முக கவங்களும்,4 லட்சத்து 18 ஆயீரம் பாதுகாப்பு கண்ணாடிகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
அதே போன்று சுமார் எட்டரை கோடி ரூபாய் மதிப்பிலான தரமற்ற கிருமிநாசினியும் கைப்பற்றப்பட்டதாக சீன வர்த்தக கட்டுப்பாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.