கொரோனாவுக்கு மருந்தாகப் பயன்படுத்தப்பட்டு வரும் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரைகள் கடும் பக்கவிளைவுகளை ஏற்படுத்தும் என அமெரிக்க நிறுவனம் எச்சரித்துள்ளது.
இதுகுறித்து அமெரிக்காவின் எஃப் டி ஏ எனப்படும் உணவு மற்றும் மருந்து நிர்வாகத்துறை சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரைகள் உயிருக்கு ஆபத்தான பக்க விளைவுகளை ஏற்படுத்தும் எனக் குறிப்பிட்டுள்ளது.
கொரோனாவின் தன்மையைப் பொறுத்து கொடுக்கப்படும் ஹைட்ராக்ஸின் மருந்துகள் நோயின் வீரியத்தைக் குறைக்கலாம் என்றும் தெரிவித்துள்ளது.
ஆனாலும் கொரோனாவுக்கு மருந்துகள் கண்டுபிடிக்கப்படும் வேளையில் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தினால் உண்டாகும் பக்க விளைவுகள் ஆய்வு நடத்த வேண்டும் என எஃ டி ஏ கருத்துக்கூறியுள்ளது. கொரோனாவுக்கு சிகிச்சையளிக்க இந்த மருந்துகள் பாதுகாப்பானவை அல்லது பயனுள்ளவை என நிரூபிக்கப்படவில்லை என்று எஃ டி ஏகூறியது. ஆனால் இதய நோய்கள் உள்ளவர்களுக்கு ஆபத்துக்களை ஏற்படுத்துவதாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.