அமெரிக்காவின் நாசா அறிவியலாளர்கள் கொரோனா நோயாளிக்குச் சிகிச்சை அளிக்க உதவும் வென்டிலேட்டரைத் தயாரித்துள்ளனர்.
நாசா அறிவியலாளர்கள் விண்கலங்களில் கிருமிநீக்கம் செய்வதற்கான கருவி, கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் செலுத்த உதவும் வென்டிலேட்டர் ஆகியவற்றைத் தயாரித்துள்ளனர்.
இந்த கருவிகளின் செயல்பாடு குறித்து வாஷிங்டனில் நாசா நிர்வாகி ஜிம் பிரைடன்ஸ்டின், இணை இயக்குநர் டேவ் கல்லகர் ஆகியோர் அதிபர் டொனால்டு டிரம்புக்கு விளக்கம் அளித்தனர்.
மவுன்ட் சினாய் மருத்துவர்களும் நாசா அறிவியலாளர்களும் இணைந்து 37 நாட்களில் வென்டிலேட்டரைத் தயாரித்துள்ளதாக டேவ் கல்லகர் தெரிவித்தார். இந்த வென்டிலேட்டரைச் சிகிச்சைக்குப் பயன்படுத்த ஒப்புதல் கோரி விண்ணப்பித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.