கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்க ஒன்றரை வருடங்கள் ஆகலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இந்த ஆண்டே அதை கண்டுபிடித்து தருவதாக சுவிஸ் விஞ்ஞானி மார்ட்டின் பேச்மேன் (Martin Bachmann) என்பவர் அறிவித்துள்ளார்.
சீனா மற்றும் லத்வியாவில் உள்ள சக விஞ்ஞானிகளின் ஒத்துழைப்புடன் இந்த தடுப்பூசிக்கான பூர்வாங்க சோதனை எலிகளிடம் நடத்தப்பட்டுள்ளதாக அவர் கூறி இருக்கிறார், சுவிட்சர்லாந்தின் மருந்து கட்டுப்பாட்டு நிறுவனமான சுவிஸ்மெடிக் (Swissmedic)-ன் ஒப்புதல் கிடைத்தால் வரும் ஆகஸ்டில் 240 நபர்களிடம் இதை சோதிக்க தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கொரோனாவைரஸ் போன்ற குணாதியசங்களுடன் கூடிய டம்மி வைரசை செலுத்தி மனித உடலில் அதற்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தியை ஏற்படுத்துவதே இந்த தடுப்பூசி முறையின் நுட்பம் என்றும் அவர் விளக்கம் அளித்தருக்கிறார்.