மத்திய கிழக்கு பகுதியில் அமெரிக்காவுடன் பதற்றம் நிலவி வரும் நிலையில், நூர் எனும் ராணுவ செயற்கைக்கோளை ஈரான் விண்ணில் வெற்றிகரமாக செலுத்தியுள்ளது.
அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் பொருளாதார தடைக்கு மத்தியில் ஏற்கெனவே ராணுவ பயன்பாட்டுக்கு 4 முறை அந்த செயற்கைக்கோளை ஈரான் அனுப்ப முயன்றது.
ஆனால் 4 முறையும் செயற்கைக்கோள் ஏவும் முயற்சி தோல்வியடைந்தது. இந்நிலையில் அந்த செயற்கைக்கோளை புவி வட்ட பாதையில் 425 கிலோ மீட்டர் தூரத்தில் வெற்றிகரமாக ஈரான் நிலைநிறுத்தியுள்ளது.
ராணுவத்தின் கண்காணிப்பு மற்றும் உளவு பணிக்கு ஈரானால் அந்த செயற்கைக்கோள் பயன்படுத்தப்பட இருப்பதாக கூறப்படுகிறது.
அந்த செயற்கைக்கோள் செலுத்தப்பட்டதை மிகப்பெரிய சாதனை என்று ஈரான் ராணுவ புரட்சிகர படைப்பிரிவு தளபதி ஹொசைன் சலாமி ( IRAN'S ELITE REVOLUTIONARY GUARDS CHIEF, HOSSEIN SALAMI) தெரிவித்துள்ளார்.