அமெரிக்காவில் வீட்டில் வளர்க்கப்பட்ட 2 பூனைகளுக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் லட்சகணக்கான மக்களுக்கு கொரோனா உறுதியான போதிலும், வீட்டு வளர்ப்பு பிராணிகளுக்கு நோய் தொற்று இதுவரை கண்டுபிடிக்கபடாமல் இருந்தது. இந்நிலையில், நியூயார்க் மாகாணத்தில் வீட்டில் வளர்க்கப்பட்ட 2 பூனைகள் உடல்நலம் பாதிக்கப்பட்டதால் அவற்றுக்கு சோதனை நடத்தப்பட்டது.
இதில் அந்த 2 பூனைகளுக்கும், கொரோனா வைரஸ் பாதித்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ஒரு பூனையின் உரிமையாளருக்கு கொரோனா அறிகுறி இல்லை. அதேநேரத்தில் இன்னொரு பூனையின் உரிமையாளருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் அவரிடம் இருந்து பூனைக்கு பரவியதா அல்லது வேறு ஏதேனும் வழியில் பரவியதா என கண்டுபிடிக்கும் முயற்சியில் மருத்துவர்கள் ஈடுபட்டுள்ளனர்.