60 நாட்களுக்கு வெளிநாட்டவருக்கு தடை விதிக்கும் வகையிலான குடியேற்ற சட்டத்தில் இன்று கையெழுத்திடப் போவதாக அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்றால் உலகிலேயே மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நாடான அமெரிக்காவில் சுமார் இரண்டேகால் கோடி பேருக்கு வேலைவாய்ப்பு இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எனவே வேலைவாய்ப்புகளில் அமெரிக்கர்களுக்கு முன்னுரிமை அளிப்பதற்காக இந்த முடிவை எடுத்துள்ளதாக டிரம்ப் கூறி இருக்கிறார். கிரீன்கார்டு சம்பந்தமான குடியேற்றங்களுக்கே இந்த தடை பொருந்தும் என கூறப்படுகிறது.
இந்தியர்கள் அதிகம் செல்லும் H-1B விசாக்களுக்கு இந்த தடை பொருந்தாது என வெள்ளை மாளிகை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 60 நாட்களுக்குப் பிறகு, பொருளாதார நிலைமையை ஆராய்ந்த பின், குடியேற்ற தடையை நீக்குவதா, நீட்டிப்பதா என முடிவு செய்யப்படும் எனவும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.