சிங்கப்பூரில் ஊரடங்கு உத்தரவு ஜூன் 1 ஆம் தேதி வரை நீட்டிக்கப் பட்டுள்ளதாக அந்நாட்டின் பிரதமர் லீ சியன் லூங் (Lee Hsien Loong) தெரிவித்துள்ளார்.
இதுவரை இல்லாத அளவுக்கு, நேற்று ஒரே நாளில், 1426 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்னிக்கை 9,125 ஆக உயர்ந்தது.
இதனால் நோய் தொற்று மேலும் பரவுவதை கட்டுப்படுத்த, அந்நாட்டு பிரதமர், மே 4 ஆம் தேதி வரை பிறப்பிக்கப்பட்டிருந்த ஊரடங்கை, ஜூன் 1 ஆம் தேதி வரை, மேலும் 28 நாட்களுக்கு நீடித்துள்ளார்.
அத்தியாவசியப் பொருட்களை வாங்க, வீட்டிற்கு ஒருவர் மட்டும் வெளியே செல்லுமாறு, நாட்டு மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.