வூகானில் கொரோனா பரவியது குறித்து சீனா வெளியிடும் தகவல்களையும், கொரோனா தொற்றை உலக சுகாதார நிறுவனம் கையாளும் விதம் குறித்தும் சுதந்திரமான விசாரணை நடத்த வேண்டும் என ஆஸ்திரேலியா கூறியுள்ளது.
உலகை பதம் பார்த்து வரும் கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடான அமெரிக்கா, சீனாவை சந்தேக கண்ணோட்டத்துடன் பார்ப்பதுடன், உலக சுகாதார நிறுவனத்தையும் குற்றம் சாட்டியது. இந்நிலையில் ஆஸ்திரேலிய வெளியுறவு அமைச்சர் மெரைஸ் பெய்ன் (Marise Payne), அரசு தொலைக்காட்சியான ஏ.பி.சி (ABC) க்கு பேட்டி அளித்துள்ளார்.
கொரோனா வைரசின் தோற்றம், பரவல் உள்ளிட்ட தகவல்களை, சீனா அளித்துள்ள தகவல்களுடன் ஒப்பிட்டு உண்மையை அறிந்து கொள்ள விசாரணை தேவை எனக் கூறியுள்ளார்.