கொரோனா உயிரிழப்பில் சீனா தான் முதலிடம் என்றும், சீன அரசு தெரிவிக்கும் தகவல் நம்பகமானது அல்ல என்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், உயிரிழந்தோர் எண்ணிக்கையில் அமெரிக்கா முதலிடத்தில் இல்லை என்றார். நவீன மருத்துவ வசதிகளைக் கொண்ட பிரிட்டன், பிரான்ஸ், பெல்ஜியம், இத்தாலி, ஸ்பெயின் நாடுகளிலேயே உயிரிழப்பு விகிதம் அதிகமாக இருக்கும்போது, சீனாவில் பூஜ்யம் புள்ளி மூன்று மூன்று விழுக்காடு தான் இறப்பு விகிதம் என்பது நம்பும்படியாக இல்லை எனத் தெரிவித்தார்.
இது அனைவருக்கும் தெரியும் என்றாலும், செய்தியாளர்கள் யாரும் அதை வெளியிட விரும்பவில்லை எனக் குறிப்பிட்டார். சில நாட்களில் இதுபற்றித் தான் விளக்கம் அளிக்க உள்ளதாகவும் டிரம்ப் தெரிவித்தார்.