அமெரிக்காவில் ஒரே நாளில் 33 ஆயிரத்து 400க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா நோய் தொற்று உறுதியாகியுள்ளது.
உலக நாடுகளிலேயே கொரோனாவால் மிக அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக அமெரிக்கா திகழ்கிறது. அந்நாட்டில் நேற்று கொரோனா பாதிப்பு, பலி குறித்து ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் புள்ளி விவரம் வெளியிட்டுள்ளது. அதில் நேற்று ஒரே நாளில் 33 ஆயிரத்து 494 பேருக்கு நோய் தொற்று உறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் பாதித்தோரின் எண்ணிக்கை 7 லட்சத்து 34 ஆயிரத்து 969ஆக அதிகரித்திருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.இதுதவிர்த்து ஆயிரத்து 849 பேர் கொரோனா நோய்க்கு உயிரிழந்துள்ளதாகவும், இதனால் பலி எண்ணிக்கை 39 ஆயிரத்தை 900ஐ தாண்டி இருப்பதாகவும் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக புள்ளி விவரங்களில் கூறப்பட்டுள்ளது.