பிரான்ஸ் விமானம் தாங்கிக் கப்பலில் உள்ள பாதிக்கும் மேற்பட்ட ஊழியர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாடு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அந்நாட்டு பாதுகாப்புத்துறை அமைச்சர் ஃபிளாரன்ஸ் பார்லி செய்தியாளர்களிடம் பேசும்போது, பிரான்சின் ஒரே விமானம் தாங்கிக் கப்பலான சார்லஸ் டி கோலில் உள்ள 2 ஆயிரத்து 300 பேரில் 2 ஆயிரத்து 10 பேருக்கு கொரோனா சோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாக் கூறினார்.
இதில் ஆயிரத்து 81 பேருக்கு நோய்த் தொற்று உறுதியாகிருப்பதாக கூறிய ஃபிளாரன்ஸ், அதில் 545 மாலுமிகளில் 24 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
கொரோனா தொற்று பரவியதையடுத்து கப்பல் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது.