இங்கிலாந்து ராணியின் பிறந்தநாளை குறிக்கும் வகையில் ஆண்டு தோறும் துப்பாக்கி குண்டுகள் முழங்க வழங்கப்படும் ராணுவ மரியாதை, கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
அரண்மனை தொடர்பான நிகழ்ச்சிகள் மற்றும் ராணியின் பிறந்தநாளை சிறப்பிக்கும் வகையில் துப்பாக்கியால் வீரர்கள் சுட்டு ராணுவ மரியதை செலுத்துவது வழக்கம். இந்த நிலையில் ஏப்ரல் 21 ஆம் தேதி 94 வது பிறந்தநாளை கொண்டாடவுள்ள ராணி, இந்த முறை ராணுவ மரியாதை வேண்டாம் என்று தெரிவித்துள்ளார். கொரோனாவின் கோரத்தாண்டவத்தால் பல ஆயிரம் உயிர்களை இழந்துள்ள சூழலில் ராணுவ மரியாதை வழங்குவது சரியாக இருக்காது எனவும் குறிப்பிட்டுள்ளார். இதன்பொருட்டு, இங்கிலாந்து ராணி 2ம் எலிசபெத்தின் 68 ஆண்டு கால ஆட்சி காலத்தில் முதன்முறையாக ராணுவ மரியாதை ரத்து செய்யப்பட்டுள்ளது.