தென்கொரியா, சீனா உள்ளிட்ட நாடுகளில் கொரோனா பாதிப்பில் இருந்து குணம் அடைந்தவர்களுக்கு மீண்டும் நோய் தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருப்பது, அந்த நோயை குணப்படுத்துவது குறித்த கவலையை ஏற்படுத்தியுள்ளது.
தென்கொரியாவில் குணப்படுத்தப்பட்ட 163 பேருக்கு மீண்டும் பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சீனா உள்ளிட்ட வேறு பல நாடுகளிலும் இந்த நிலை உருவாகியுள்ளது. மீண்டும் பாதிக்கப்பட்டவர்கள் அபாயகரமான நிலையில் இல்லாமல் லேசான அறிகுறிகளுடனேயே இருந்தாலும், நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துவது குறித்து முழுமையாக அறியாத நிலையில் குணமடைந்தவர்கள் மீண்டும் பாதிக்கப்படுவது கவலைக்குரியது என்று தென்கொரிய சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.